Asianet News TamilAsianet News Tamil

Watch : கோவையில் கடும் பனிப்பொழிவு! முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

கோவை புறநகர் பகுதிகளில் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு நிலவியது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து சென்றன.
 

First Published Nov 22, 2022, 11:39 AM IST | Last Updated Nov 22, 2022, 11:39 AM IST

கோவை மாவட்டத்தில் கடந்து சில தினங்களாகவே இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந் நிலையில் அதிகாலையில் இருந்து கடும் பனிப்பொழிவு நிலவியது. காலை 7.30 மணி வரை சாலையே தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு இருந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன. கருமத்தம்பட்டி, கணியூர், தெக்கலூர், நீலாம்பூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் வாகனங்கள முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி ஊர்ந்து செல்கின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் பனி மூட்டத்தால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
 

Video Top Stories