பிரதமரின் வாகன பேரணியில் அரசுப் பள்ளி மாணவர்கள்; சிக்கும் முக்கிய புள்ளிகள்? ஆட்சியர் அதிரடி

பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சியில் அரசுப் பள்ளியைச் சார்ந்த சுமார் 50 மாணவர்கள் பள்ளி சீருடையுடன் அழைத்து வரப்பட்டு நீண்ட நேரம் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Mar 19, 2024, 2:54 PM IST | Last Updated Mar 19, 2024, 2:54 PM IST

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட வாகன பேரணி நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்றது. பிரதமரை காணும் ஆர்வத்தில் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள், சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்து பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் பள்ளி மாணவர்களை எந்தவிதத்திலும் பயன்படுத்தகூடாது என்று தெரிவித்துள்ளது. 

அப்படிப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், பள்ளி சீருடையுடன் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட புகைபடங்கள் பெருமளவில் பரவியதால் அது தொடர்பாக மாவட்ட தொடக்க  கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் பள்ளியில் நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு 24 மணி நேரத்தில் விளக்கம்  அளிக்க உத்தரவிட்ட நிலையில் நேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Video Top Stories