வெள்ளியங்கிரியில் காட்டு யானையை போட்டோ எடுத்து டென்ஷனாக்கிய பக்தர்கள்; யானை ஆக்ரோஷம்

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை  பிளிறியவாறு துரத்திய காட்டு யானையின் செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்.

First Published Mar 16, 2024, 10:35 AM IST | Last Updated Mar 16, 2024, 10:35 AM IST

கோவை மாவட்டம் பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சிவராத்திரியை முன்னிட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதைத் தொடர்ந்து மலையின் அடிவாரப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகே திடீரென  காட்டு யானை ஒன்று வந்தது.

அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் யானையை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தனர். திடீரென ஆவேசமடைந்த யானை பக்தர்கள் கூட்டத்தை நோக்கி பிளிறி கொண்டு ஓடி வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.  இதனை அங்கு இருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ காட்சிகளாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video Top Stories