கோவை ராமகிருஷ்ணன் மனைவி மறைவு; ஆ.ராசா, செந்தில் பாலாஜி நேரில் அஞ்சலி

கோவையில் நேற்று காலமான தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தியின்  உடலுக்கு திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா எம்பி, அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

First Published Jan 21, 2023, 7:33 PM IST | Last Updated Jan 21, 2023, 7:33 PM IST

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்  அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  திராவிடர் விடுதலை கழக செயலாளர் கொளத்தூர் மணி, பேரறிவாளன், அற்புதம் அம்மாள்  உட்பட ஏராளமானோர்  அஞ்சலி செலுத்தினர். இதனைதொடர்ந்து, காந்திபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் ஆ.ராசா, செந்தில்பாலாஜி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Video Top Stories