ராமர் கோவில் திறப்பு; கோவையில் கைகளில் விளங்கேந்தி ஊர்வலமாக வந்த பக்தர்கள்

ராமர் கோவில் திறப்பைத் தொடர்ந்து கோவையில் பக்தர்கள் சிலர் தங்கள் கைகளில் விளக்கை ஏந்தியபடி ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

First Published Jan 23, 2024, 7:11 AM IST | Last Updated Jan 23, 2024, 7:11 AM IST

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கோவையில் பெண்கள் வீடுகளில் தீப விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் விளக்குகளுடன் ஊர்வலமாக சென்றனர். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து கோவை கதிர் நாயக்கன்பாளையம் அண்ணா நகர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் ராமரை வரவேற்கும் விதமாக வண்ண கோலமிட்டு தீப விளக்கு ஏற்றி  வழிபட்டனர். தொடர்ந்து ராமர் வேடமிட்ட குழந்தைகளுடன், பெண்கள் கையில் தீப விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள ராமர் கோவில் வரை சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Video Top Stories