சந்திரயான் விநாயகரை வடிவமைத்து அசத்திய கோவை நகை வடிவமைப்பாளர்

கோவையில் சந்திரயான் 3 விண்களம் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் நகை வடிவமைப்பாளர் ஒருவர் சந்திரயான் விநாயகரை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

First Published Aug 23, 2023, 10:46 PM IST | Last Updated Aug 23, 2023, 10:46 PM IST

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யு.எம்.டி.ராஜா. தனியார் நிறுவனத்தில் தங்க நகை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். மைக்ரோ அளவில், ஓவியம் வரைவதில் ஆர்வம் மிகுந்தவர். மூலகடவுள் விநாயகர் சிலையில் உள்ள 4 கைகளில், ஒரு கையில் சந்திரனும், மற்றொரு கையில் சந்திரயான் 3 விண்கலமும், மற்ற இரண்டு கைகளில் ஒன்றில் தேசியக்கொடியும், ஒரு கை ஆசிர்வாதம் செய்வது போன்றும் வடிவமைத்துள்ளார். 

Video Top Stories