கோவையின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் வெடிகுண்டு பரிசோதனை
கோவையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மாநகர போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகரில் உள்ள முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் சோதனையில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை பிரசித்தி பெற்ற கோனியம்மன் திருக்கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிபொருட்களை கண்டறியும் கருவிக்கொண்டு கோவில் வளாகத்தை சுற்றிலும் சோதனை செய்தனர்.
வருகின்ற 26 குடியரசு தின விழாவை முன்னிட்டு முக்கியமான திருத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை செய்து வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கென 4 தனிப்படைகள் அமைத்து கோட்டை ஈஸ்வரன் கோவில், கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோவில், கோவை மத்திய ரயில் நிலையம், வடகோவை ரயில் நிலையம், காந்திபுரம், மத்திய பேருந்து நிலையம், டவுன் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் ரோடு, புதிய பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், ப்ரூக்ஃபீல்டு மால், ஃபன் மால், பிரசோன் மால், பூ மார்க்கெட், வ உ சி பார்க், ஐ லவ் கோவை பார்க், வாலாங்குளம் பார்க், கோவை அரசு மருத்துவமனை மற்றும் மக்கள் அதிகமாக கூடக்கூடிய திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் ஆகிய பகுதிகள் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.