Asianet News TamilAsianet News Tamil

Watch : கோவையில் திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு கருப்பு கொடி!- பாஜகவினர் 50பேர் கைது!

திமுக எம்பி ஆ ராசாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து கோவை விமான நிலையத்திலிருந்து காளப்பட்டி செல்லும் சாலையில் பாஜக மகளிர் அணி சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பாஜகவை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சர்ச்சைக்குரிய வகையில் ஆ.ராசா பேசியதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். நீலகிரி தொகுதி எம் பி ஆன ராசா காளப்பட்டி வழியே உதகை செல்வதாக இருந்தது. இதனால் அவர் செல்லும் காளப்பட்டி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆ.ராசாவைக் கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Video Top Stories