சினிமா நடிகர்களுக்கான தேர்வு: சிறுவர்,சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்பு…

கோவை: கிளஸ்டர் மீடியா கல்லூரியில் சினிமா நடிகர்களுக்கான தேர்வில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

First Published Mar 3, 2024, 8:27 PM IST | Last Updated Mar 3, 2024, 8:27 PM IST

சினிமா என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் நடிக்க ஆசைப்படுவார்கள். இந்நிலையில் தமிழகத்தில் சமீபத்தில் திரைத்துறையில் புதுவிதமான நடிகர்கள், நடிகைகள் களமிறங்கி சினிமாவில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர்.இதனிடையே சினிமாவில் நடிக்க ஆசைப்படுபவர்களுக்கு ஒரு தளமாக ஸ்டுடியோ கிரீன் மற்றும் ஸ்டார் டா ஆகியோர் இணைந்து புதிய சினிமா நடிகர்களுக்கான தேர்வுகளை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கிளஸ்டர் மீடியா கல்லூரியில் சினிமா நடிகர்களுக்கான தேர்வில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தினர். இரண்டு நாட்கள் கோவையில் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக தமிழக முழுவதும் உள்ள 10 மாவட்டங்களிலும் சினிமா நடிகர்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Video Top Stories