மக்களோடு கூட்டணி அமைத்து போட்டியிட தயார்; கோவையில் அதிமுகவினர் போஸ்டர்

ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு யார் கூட்டணி வந்தாலும் கூட்டணியோடு இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் என கோவையில் அம்மா பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

First Published Feb 22, 2024, 2:36 PM IST | Last Updated Feb 22, 2024, 2:36 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வருகின்ற 24ஆம் தேதி ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்றத் தேர்தலை சுட்டிக்காட்டியும் கூட்டணியை குறிப்பிட்டும் அம்மா பேரவை கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த போஸ்டரில் 76 வது பிறந்தநாள் காணும் புரட்சித்தலைவியை(ஜெயலலிதா) வணங்குகிறோம் எனவும், "தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் எத்தனை கூட்டணியோடு யார் வந்தாலும் எங்களோடு யார் கூட்டணி வந்தாலும் கூட்டணியோடு இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் நாளையும் நமதே! நாற்பதும் நமதே! என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, மற்றும் அம்மா பேரவை கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

Video Top Stories