அரசுப் பேருந்தில் பயணிகள் அமர இருக்கை இல்லாததால் முதியவர் தரையில் அமர்ந்து பயணித்த அவலம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு நகரப் பேருந்தில் இருக்கைகள் இல்லாததால் முதியவர் ஒருவர் தலையில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.

First Published Aug 2, 2023, 12:53 PM IST | Last Updated Aug 2, 2023, 12:53 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆனைமலை, சேத்துமடை, வேட்டைக்காரன் புதூர், காளியாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளி மாணவர்கள் பள்ளி, வேலைக்கு செல்லவும் பொள்ளாச்சிக்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் காளியபுரம் 11 A பேருந்தில் பின்புறம் பயணிகள் உட்கார இருக்கை இல்லாததால் பேருந்தில் கீழே அமர்ந்து முதியவர் பேருந்தில் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் அறிவிக்கப்பட்ட பின்னர் நகரப் பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் பல்வேறு குறைபாடுகளுடனே அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.