கோவையில் அரசு பேருந்தை பிடித்துக் கொண்டு 3 கி.மீ. ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவர்

கோவை விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலையில் பேருந்தின் பின்னால் காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.
 

First Published Oct 5, 2022, 8:04 PM IST | Last Updated Oct 5, 2022, 8:04 PM IST

கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வெளிநாட்டவர் ஒருவர் கோவை அவிநாசி சாலையில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்துள்ளார். சித்ரா பகுதியில் இருந்து ஹோப்ஸ் காலேஜ் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அவிநாசி சாலையில் வெளிநாட்டவர் ஸ்டாட்டிங் செய்த காட்சிகள் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாகனங்கள் அதிகமாக செல்லும் பரபரப்பான அவிநாசி சாலையில் ஓடும் பேருந்தில் பின்புறமாக வெளிநாட்டவர் ஸ்கேட்டிங் செய்தார். ஆபத்தை உணராமல் வெளிநாட்டவர் செய்த இந்த நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Video Top Stories