Viral : கோவில் வாசலில் குடிபோதையில் அங்கபிரதட்சனம்! போதை ஆசாமியால் பரபரப்பு!

கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் முன்பு, மது போதையில் விழுந்து சாமி தரிசனம் செய்த போதை ஆசாமி மற்ற பக்தர்களுக்கு, வழி கொடுக்காமல் விழுந்து அங்க பிரதோஷணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

First Published Jun 10, 2023, 5:08 PM IST | Last Updated Jun 10, 2023, 5:08 PM IST

கோவை மாவட்டத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மண்ணீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் ஓதிமலை செல்லும் சாலையில் அன்னூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இக்கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் வருகை இருக்கும். அதே வேளையில் சிவனுக்கு உகந்த நாட்கள் ஆன பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் வருகை சற்று அதிகமாகவே காணப்படும்.

இந்த நிலையில் ஓதிமலை செல்லும் சாலையில் இரு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் மது அருந்தி விட்டு வரும் நபர்கள் சாலையில் மது போதையில் விழுந்து கிடப்பது வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் மண்ணீஸ்வரர் கோவில் முன்பாகவே மது போதை ஆசாமி ஒருவர் போதையில் விழுந்து கிடந்துள்ளார். அவரை கோயிலுக்கு வந்த பக்தர்கள் எழுப்பி பார்த்தும் முடியவில்லை



தட்டி எழுப்பியும் எழுந்திருக்காததால் அவர் மீது தண்ணீரை ஊற்றியும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் உள்ளே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாக்கினர் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது

Video Top Stories