கோவையில் பெய்த கனமழையால் மேம்பாலத்தின் அடியில் தண்ணீரில் சிக்கிய கார்

கோவை மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் ரயில்வே பாலத்தின் அடியில் தேங்கியிருந்த மழை நீரில் கார் ஒன்று சிக்கிக்கொண்டது.

First Published May 2, 2023, 3:59 PM IST | Last Updated May 2, 2023, 4:00 PM IST

கோவை மாநகரில் நேற்று  உக்கடம், கவுண்டம்பாளையம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் அப்பகுதியில் செல்லும் மக்கள் உள்ளிட்டோர் பாதிப்படைந்தனர். 

இந்நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கி நின்றதால் அவ்வழியாக வந்த கார் ஒன்று  கவுண்டம்பாளையம் மேம்பாலம் அடியில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பப்பட்டுள்ளது.

Video Top Stories