கதவுகளில் அமர்ந்து கொண்டு போதையில் சிட்டாக பறந்த இளைஞர்கள்; மேட்டுபாளையத்தில் சக வாகன ஓட்டிகள் அச்சம்

மேட்டுப்பாளையத்தில் இரவு நேரத்தில் மது போதையில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி காரின் கதவுகளில் ஏறி அமர்ந்து கொண்டு  அத்துமீறிய இளைஞர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

First Published Feb 28, 2024, 11:57 AM IST | Last Updated Feb 28, 2024, 11:57 AM IST

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காரமடை சாலை இரு வழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் நேற்று இரவு சொகுசு காரில் வந்த இளைஞர்கள் சிலர் காரின் இருக்கையில் அமராமல் நான்கு கதவுகளுக்கும் மேல் ஏரி அமர்ந்து கொண்டு பொதுமக்களுக்கும், சக வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றுள்ளனர்.

மது போதையில் காரினை தாறுமாறாகவும், பிற வாகனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சென்ற அந்த காரில் பயணித்த இளைஞர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை. இந்த இளைஞர்களின் அத்துமீறல்களை அவர்களின் காருக்கு பின்னால் மற்றொரு காரில் பயணம் செய்தவர்கள் இந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

தற்போது அந்த வீடியோவை அடிப்படையாககக் கொண்டு மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை காவல்துறை அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video Top Stories