கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்; பாலத்தில் இருந்து கீழே விழுந்த நபர் பலி

கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி பின்புறம் அமர்ந்தவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். 

First Published Apr 10, 2023, 4:56 PM IST | Last Updated Apr 10, 2023, 4:56 PM IST

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பாலத்தில் நேற்று காலை 10 மணி அளவில்  சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 51), வினோத் (32) இவர்கள் இருவரும் அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனத்தில் நஞ்சுண்டாபுரம் பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்புச் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரவணகுமார் பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார். தற்போது விபத்து ஏற்பட்டு சரவணகுமார் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories