Asianet News TamilAsianet News Tamil

புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீரென மாறி மாறி தாக்கிக்கொண்ட இளைஞர்களால் போர்க்களமான கோவை

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளைஞர்கள் சிலர் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நடந்த கொண்டாட்டத்தில் ஆடல், பாடலுடன் உற்சாக கொண்டாட்டங்கள் அரங்கேறின. கோவை வாலாங்குளம் பகுதியில் வாலிபர்கள் குவிந்து குத்தாட்டம் போட்டனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வாலிபர்கள் சிலர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இதனால் வாலிபர் ஒருவர் மூக்கு உடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதில் சண்டையிட்டவகள் யார்? ஏன் சண்டையிட்டார்கள் என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Video Top Stories