பேருந்து சக்கரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி
பெண் ஒருவர் மாநகரப் பேருந்து மோதி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது
கடந்த புதன் கிழமை காலை 8 மணி அளவில் சென்னை ஓட்டேரியில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட உள்ளது அப்போது எதிர்ப்புறமாக கடந்து செல்ல வயதான பெண் ஒருவர் மாநகரப் பேருந்து 29A நின்று கொண்டு இருந்த சமயத்தில் பேருந்துக்கும் ஆட்டோக்கும் இடையே மிக நெருக்கமாக சாலையை கடக்க முயன்றபோது ஓட்டுனர் அவர் நடந்து சென்றதை பார்க்க முடியாமல் அந்த பெண் மீது பேருந்து மோதி கீழே விழுந்ததில் முன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் அதன் பின்னர் இதனை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்