Watch : வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
சென்னை ஆர்.கே.நகரில் வீட்டில் பதுக்கி வைத்த இரண்டரை டன் ரேஷன் அரிசியை உணவு வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
ஆர்.கே நகர் பகுதிக்கு உட்பட்ட சிவாஜி நகர் பகுதியில் ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆர்.கே நகர் போலீசார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டரை டன் அளவிலான ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்தனர்
இது குறித்து உடனடியாக தமிழ்நாடு உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உதவி ஆணையர் நெகேமியா மற்றும் கண்காணிப்பாளர் மூர்த்தி அவர்களுக்கு தகவல் தெரிவித்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து
அதிகாரிகள் உடனடியாக இரண்டரை டன் அரிசியை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள் வீட்டில் வைத்து விற்பனை மேற்கொண்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்