Watch : விடிந்தும் கொட்டித் தீர்க்கும் கனமழை! - தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை!

இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை, விடிந்த பின்னரும் கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
 

First Published Nov 11, 2022, 1:33 PM IST | Last Updated Nov 11, 2022, 1:33 PM IST

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சென்னையின் பல்லாவரம், தண்டையார் பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதனிடையே, சென்னை திநகர் பகுதியில் தண்ணீர் சூழந்த பகுதிகளை, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.