சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி.. முன் எச்சரிக்கையாக இழுத்து மூடப்பட்ட மாமல்லபுரம்..!வீடியோ
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக மாபல்லபுரம் கலங்கரை விளக்கத்தை சுற்றி பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு கலங்கரைவிளக்கம் தற்காலிகமாக மூடப்பட்டது
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும் அவர்கள் முக்கிய பகுதிகளில் நாசவேலையில் ஈடுபட உள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
இதனால் மாபல்லபுரம் கலங்கரை விளக்கம் மற்றும் கடல்சார் அருங்காட்சியகம் ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது இதற்கான அறிவிப்பு நோட்டீசும் கலங்கரை விளக்கத்தின் நுழைவாயிலில் ஒட்டப்பட்டு உள்ளது
மேலும் இன்று கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்க்க வந்த பயணிகள் பலரும் அறிவு பரிசை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் இதற்கு முன் 1991-இல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்போது கலங்கரை விளக்கத்தை பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது ஏழு ஆண்டுகள் மூடப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது