ஆவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு!
ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, நோயாளிகள் பயன்பாட்டிற்காக ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான சா.மு.நாசர் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவ மனையில் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தையும் அவர் வழங்கினார்.