Asianet News TamilAsianet News Tamil

CaptainVijayakanth: கேப்டன் விஜயகாந்தை செல்போன் டார்ச் அடித்து வழி அனுப்பிய தொண்டர்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்கள் செல்போனில் டார்ச் அடித்து அவரை வழி அனுப்பி வைத்தது காண்போரின் கண்களில் ஒரு நிமிடம் கண்ணீரை வரவழைத்தது.

First Published Dec 29, 2023, 7:44 PM IST | Last Updated Dec 29, 2023, 7:44 PM IST

தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயாகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்குகளில் பங்கேற்க குடும்ப உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான பொதுமக்களும், தொண்டர்களும் கட்சி அலுவலகத்தின் எதிரே நிறுத்தப்பட்டனர்.

அங்கு கூடியிருந்தவாரு இறுதிச் சடங்குகளை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்த தொண்டர்கள், பொதுமக்கள் கேப்டன் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்படும் தருணத்தில் தங்கள் செல்போன்களில் டார்ச் லைட் அடித்து அவரை வழிஅனுப்பி வைத்த சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்தது.

Video Top Stories