கொசஸ்தலை ஆற்றின் தடுப்பணையில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு

கொசஸ்தலை ஆற்றின் தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மாயமான இளைஞர் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.

First Published Jan 9, 2023, 1:21 PM IST | Last Updated Jan 9, 2023, 1:21 PM IST

சென்னை முகப்பேரை சேர்ந்த ராஜா தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் தமது நண்பர்களுடன் கொசஸ்தலை ஆற்றில் மீஞ்சூர் அருகே உள்ள சீமாவரம் தடுப்பணையில் குளித்து கொண்டிருந்தார். திடீரென ராஜா நீரில் மூழ்கி மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இரவு வெளிச்சம் குறைந்ததால் தேடும் பணி கைவிடப்பட்டது பின்னர் இன்று காலை கிராம இளைஞர்கள் தடுப்பணையில் மாயமான ராஜாவை சடலமாக மீட்டனர். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய மீஞ்சூர் காவல்துறையினர் பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories