டிஎம்எஸ் அலுவலகம் முற்றுகை; 1000 செவிலியர் குண்டுக்கட்டாக கைது

மருத்துவ பணிகள் இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

First Published Oct 10, 2023, 1:34 PM IST | Last Updated Oct 10, 2023, 1:34 PM IST

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை மருத்துவ பணிகள் இயக்குநர் அலுவலகத்தை முற்றுகைிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் 8 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று சென்னையில் குவிந்தனர். மேலும் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆயிரம் செவிலியர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.

Video Top Stories