சென்னையில் ஜோதி ஞான மருந்து அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்

சென்னையில் ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

First Published Feb 26, 2024, 2:41 PM IST | Last Updated Feb 26, 2024, 2:41 PM IST

சென்னை போரூர் தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவர் தயவு ஜகத்குரு தலைமையில் சன்மார்க்க அன்பர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தையும், சத்திய ஞான சபையையும், எழுப்பினார். 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன் என்று பாடிய இவர், மக்களின் பசி துயரைப் போக்க சத்திய தர்ம சாலையையும், சித்தி வளாகத்தையும் நிறுவினார். பசி பிணியை நீக்கும் மருத்துவராகவும் வாழ்ந்து வந்தார். மனுமுறை கண்ட வாசகம் ஜீவகாருண்ய ஒழுக்கம், திருவருட்பா, ஆகிய உரைநடைகளை எழுதினார். மேலும் மரணத்தை வென்ற மகானாகவும் வாழ்ந்து வந்தார். 

இந்த நிலையில் அவர் அளித்த அருமருந்துகளை சன்மார்க்க அன்பர் பலருக்கு ஜோதி ஞான மருந்து அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக சன்மார்க்க அன்பர்கள் திரு அருட்பா பாடியப்படியே ஆனந்த பெருங்கடல் மூழ்கினர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை வள்ளலார் அருட்பிரசாத குழு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Video Top Stories