Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிமுகம்.. அதிரடி காட்டும் எடப்பாடி..! வீடியோ

தமிழகத்தில் முதல்முறையாக மாநகர போக்குவரத்து கழகத்தின் முதல் மின்சார பேருந்து சேவை,
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘அம்மா பேட்ரோல்’ மற்றும்  தக்காளியை பதப்படுத்தி கூழாக்கும் நடமாடும் இயந்திரத்தை முதலமைச்சர் இன்று  தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் முதல்முறையாக மாநகர போக்குவரத்து கழகத்தின் முதல் மின்சார பேருந்து சேவை,
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘அம்மா பேட்ரோல்’ மற்றும்  தக்காளியை பதப்படுத்தி கூழாக்கும் நடமாடும் இயந்திரத்தை முதலமைச்சர் இன்று  தொடங்கி வைத்தார்

போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை குறைக்கவும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டும் மின்சார பேருந்து சேவையை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான செலவு மிகவும் குறைவு என்பதாலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நோக்கத்திலும் மின்சார பேருந்துகளை சென்னையில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு 525 மின்சார பேருந்துகளை வாங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

மின்சார பேருந்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்து பயணம் செய்தனர். இந்த பேருந்தில் 32 பேர் அமரும் வகையிலும், 22 பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம். மின்சார பேருந்துகள் பல்லவன் இல்லத்தில் ரீசார்ஜ் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வரை இப்பேருந்து இயங்கும். குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள பேருந்தில் தானியங்கி கதவுகள் வழித்தடங்களில் அறியக்கூடிய ஜிபிஎஸ் வசதி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக திருவான்மியூரில் இருந்து சென்ட்ரல் வரையிலும், கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை வரையிலும் மின்சார பேருந்துகளை இயக்க உள்ளனர். இன்னும் சில மாதங்களில் மேலும் 100 மின்சார பேருந்துகளை சென்னையில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக 181 இலவச தொலைபேசி சேவை, ஒன் ஸ்டாப் செண்டர் போன்ற பிரிவுகளை ஒவ்வொரு  மாவட்டஙிலும் ஏற்படுத்தி அதனை மகளிர் காவல் நிலையங்களுடன் இணைத்து செயல்பட்டு வருகிறது. 

 இந்த காவல்துறை பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு  மத்திய மாநில அரசுகளின்  நிதி பங்களிப்போடு  பிங்க் நிற ரோந்து வாகனம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில்  ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த சேவையை முதலமைச்சர் எடப்பாடி இன்று தலைமைச் செயலகத்தில்  தொடங்கி வைத்தார்

இதனையடுத்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பாக தக்காளியை பதப்படுத்தி கூழாக்கும் நடமாடும் இயந்திரத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
தக்காளிகளை அதிகமான விளைச்சல் ஏற்படும்பொழுது விவசாயிகள் தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தால்,  அதிக விளைச்சலில் வீணாகும்  தக்காளியை கூழாக்கும் வகையில் இயந்திரத்தை வடிவமைக்க பட்டுள்ளது.

விவசாயிகள் தக்காளியை கூழாக்கும. வாகனத்தில் கொடுக்கும் பொழுது அதனை கூழாக்கி விவசாயிகளிடமும் அல்லது மற்ற நிறுவனத்திடமும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதகாக தெரிவித்துள்ளனர் இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தவிழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Video Top Stories