Asianet News TamilAsianet News Tamil

Watch : சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், அர்ஜுன் சம்பத்தை விரட்டி அடித்த வழக்கறிஞர்கள்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற அர்ஜுன் சம்பத்தை வழக்கறிஞர்கள் விரட்டி அடித்தனர்.
 

First Published Dec 6, 2022, 4:49 PM IST | Last Updated Dec 6, 2022, 4:48 PM IST

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவிக்க வந்தார், ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய விடாமல் விரட்டி அடித்தனர்.