சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!வீடியோ
திடீரென சென்னையின் பல்வேறு இடங்களில் கன மழை..
கடந்த ஒரு வார காலமாக வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் சென்னையில் இன்று மாலையும் திடீரென மேகமூட்டம் சூழவே சென்னையின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக புரசைவாக்கம், எம்ஆர்சி நகர், போரூர் திருவல்லிக்கேணி, மாம்பழம், தி நகர், நந்தனம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி போரூர், குரோம்பேட்டை, ஆவடி, பருத்திப்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.