“தீ குளிக்கத் தயாராக இருக்கிறேன்...” - அமைச்சர் வீட்டில் தொண்டர் ஆவேசம்
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், மனு கொடுக்க வந்து வீட்டினுள் சிக்கிக் கொண்ட கட்சி நிர்வாகி ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியேற்றினர்.
அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தொகுதி பிரச்சினை குறித்து அமைச்சரிடம் நேரில் மனு கொடுக்கவந்த நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின் அடிப்படையில் வீட்டினுள் சிறை வைத்த நிலையில், சிறிது நேரம் கழித்து அவரை விடுவித்தனர்.
இது தொடர்பாக வெளியே வந்த நபர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் எனது தொகுதி விவகாரம் குறித்து அமைச்சரை சந்தித்து மனு அளிக்க வந்தேன். அப்போது அதிகாரிகள் என்னை வெளியே விடாமல் என்ன கொண்டு வந்தாய் என்று விசாரித்தனர். செல்போனையும் வலுக்கட்டாயமாக பிடிங்கிக்கொண்டனர்.
பின்னர் நீண்ட நேரம் கழித்து மீண்டும் எனது செல்போனை கொடுத்து அனுப்பிவிட்டனர்.