உயிரிழந்த அப்பாவுக்கு கண்ணீர் மல்க சல்யூட் அடித்த மகள்.. உருகவைக்கும் வீடியோ..!

கடலில் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரருக்கு வீரவணக்கம் செலுத்தி உருகிய மகள்..

First Published Oct 2, 2019, 1:48 PM IST | Last Updated Oct 2, 2019, 2:03 PM IST

உயிரிழந்த அப்பாவுக்கு மகள் கண்ணீர் மல்க வீர வணக்கம் செலுத்திய சம்பவம் அனைவரையும் உருக வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். சிஆர்பிஎஃப் படைப் பிரிவின் தலைமை காவல் அதிகாரியான இவர் அந்தமானில் பணியாற்றி வந்துள்ளார்.இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும், 14 வயதில் ஸ்ரீதன்யா என்ற ஒரே மகளும் உள்ளனர். பணியிலிருந்த செந்தில்குமார், கடலில் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனை அடுத்து அவரின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் செந்தில் குமாரின் உடலுக்கு சிஆர்பிஎஃப் சார்பில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது அவரின் 14 வயது மகள் ஸ்ரீதன்யா கண்ணீர் மல்க வீர வணக்கம் செலுத்தினார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. . பின்னர், சிஆர்பிஎஃப் வாகனம்மூலம் சொந்த ஊரான வாணியம்பாடிக்கு செந்தில்குமாரின் உடல் கொண்டு செல்லப்பட்டு 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் செந்தில்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கும் அவரது மகள் ஸ்ரீதன்யா ‘பரேட் சல்யூட்’ என்று முழங்கினார்.இச்சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது