Watch : மாண்டஸ் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நேரில் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
 

First Published Dec 14, 2022, 11:50 AM IST | Last Updated Dec 14, 2022, 11:50 AM IST

அண்மையில் சென்னை அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகம் வந்துள்ள தமிழ்நாடு மாநில பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி புயல் பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

அவர் செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் மீனவர் பகுதிகளில் புயல் பாதித்த பகுதிகளை மீனவர் பிரிவு மாநிலத் தலைவர் முனுசாமி, மாநிலச் செயலர் சதீஷ் குமார் ஆகியோருடன் பார்வையிட்டார். டாக்டர் சுதாகர் ரெட்டி, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உணவுப் பொருட்களை வழங்கினார் மற்றும் சேதமடைந்த படகுகள் மற்றும் பிற மீன்பிடி சாதனங்களைப் பார்த்தார்.