ஒரே இருசக்கர வாகனத்தில் கெத்தாக ரைடு போகும் 4 இளம் பெண்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

சென்னையில் தலைவிரிக்கோலத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 இளம் பெண்கள் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Jun 19, 2023, 3:48 PM IST | Last Updated Jun 19, 2023, 3:48 PM IST

சென்னை  பழைய வண்ணாரப்பேட்டையில் இருந்து தண்டையார்பேட்டை வரை செல்லக்கூடிய வழியில் நேற்று மாலை ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பெண்கள் பயணித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

மாடர்ன் உடையில் தலைவிரி கோலத்தோடு இருசக்கர வாகனத்தில் நால்வரில் ஒருவர் கூட தலைகவசம் அணியாமல் சாலையில் சாவுகாசமாக வளைந்து சென்று சாகசம் போல் ஆனந்தமாக சென்றுள்ளனர். இவ்வாறாக இளம்பெண்கள் ஆனந்தமாக செல்லும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆண்கள் சென்றால் சந்து, பொந்துகளில் எல்லாம் வளைத்து வளைத்து பிடிக்கும் காவல்துறை வீடியோ வைரலாகிய நிலையிலேயும் பெண்கள் மீது (இந்த 4ரோஸஸ் மீது) போக்குவரத்து விதிகளை மீறியதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Video Top Stories