ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கோவிந்த வரதராஜ பெருமாள் திருக்கல்யாண வைபவம்

கிருஷ்ணகிரியில் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் மண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீகோவிந்த வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.

First Published Jan 9, 2023, 4:40 PM IST | Last Updated Jan 9, 2023, 4:40 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் மணிமண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீ கோவிந்த வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருக்கல்யாண வைபவம் இன்று  காலை 7.30 மணி முதல் தொடங்கி 11 மணி வரை நடைபெற்றது.

மேலும் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியின் பிராண பிரதிஷ்டை வைபவமும் நடைபெற்றது. நேற்று  மாலை வேத பாராயணங்கள் நடைபெற்ற நிலையில். இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடனத்துடன் மாலை மாற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில்  ஆன்மீகப் பெரியோர்கள் பக்த கோடிகள், பொதுமக்கள்  திரளாக பங்கேற்று எல்லாம் வல்ல இறைவனுடைய திருவருளைப் பெற்றனர்.

Video Top Stories