ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First Published Sep 6, 2023, 7:23 PM IST | Last Updated Sep 6, 2023, 7:23 PM IST

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை நவநீதகிருஷ்ணன் கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பால் அபிசேகம், வெண்ணைய் அபிசேகம், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், நெய், பழங்கள், நலங்கு பொடி அபிஷேகம் 16 வகையான அபிஷேகங்கள் உட்பட பல்வேறு அபிசேகங்கள் செய்யப்பட்டது. மேலும் நவநீத கிருஷ்ணன் கோவிலில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பாடல்களை பாடியவாறு சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

Video Top Stories