watch : சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

மண்டல பூஜைக்காலம் தொடங்குவதையொட்டி சபரி மலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.
 

First Published Nov 16, 2022, 6:47 PM IST | Last Updated Nov 16, 2022, 6:47 PM IST

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஐப்பசி, கார்த்திகை மற்றும் தை மாதங்களில் கோடிக்கான பக்தர்கள் வந்து செல்வர். தமிழ் மாதந்தோறும் முதல் நாள் திறக்கப்படும் கோவில் நடை, பின்னர் அடைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு 48 நாட்கள் மண்டல பூஜை காலம் மகரவிளக்கு பூஜைக்கு பின்னர் நடை அடைக்கப்படும்.

நாளை கார்த்திகை மாதம் தொடங்க உள்ளதையொட்டியும், 48 நாட்கள் மண்டல பூஜைக்காலம் தொடங்குவதாலும் சபரிமலைக்கோவில் நடை திறக்கப்பட்டது.