Asianet News TamilAsianet News Tamil

Watch : கந்த சஷ்டி விழா! ஆறுபடை யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா யாக சாலை பூஜையுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது.
 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள விசாக கொரடு மண்டபத்தில் யாகசாலை பூஜையுடன் , காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. 25 ஆம் தேதி முதல் துவங்கி வரும் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும்.

விழாவில் இன்று காலை 8 மணிக்கு சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் வள்ளி, தேவ சேன சமேத சண்முகருக்கு முருகனின் பிரதிநிதியாக நம்பி பட்டருக்கு காப்பு கட்டி பின்னர் பக்தர்களுக்கு கம்பத்தடி மண்டபத்தில் காப்புகட்டுதல் நிகழ்சி நடைபெற்றது. .

இதேபோல், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பல மாதங்களுக்கு பின்னர் இன்று தங்கத்தேர் பவனி- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோவில் வளாகத்தில் நடைபெறும் பணிகளை அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Video Top Stories