Nov 20th - இன்றைய ராசிபலன் : இந்த நாள் இனியநாளாகட்டும்!

Horoscope Today- Indriya Rasipalan November 20th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (20/11/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

First Published Nov 20, 2022, 6:00 AM IST | Last Updated Nov 20, 2022, 6:00 AM IST

மேஷம்:
இன்று உங்கள் புகழ் உயரும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். கணவன்-மனைவி இடையே நல்லுறவு இருக்கும். தொடர்ந்து யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து வர மனஅழுத்தம் குறையும்.

ரிஷபம்:
இன்று வேண்டியவருக்கு பண உதவி செய்ய நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் தேவைய நிறைவேற்றுவீர்கள். கவனத்தை சிதறவிடாமல் தொழிலில் ஈடுபட்டால் வெற்றி கிட்டும். புதிய திட்டங்களை முன்னெடுக்கும்போது கவனம் அவசியம். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

மிதுனம்:
இன்று கவனமுடன் இருக்க வேண்டிய நாள். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுபவது மன அமைதியை தரும். பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள். நிலம் வாங்குவது அல்லது விற்பது தொடர்பான திட்டம் இருந்தால் தவிருங்கள். வியாபாரத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும்.

கடகம்:
உங்கள் விருப்பமான செயல்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகள் தீர்க்கப்படும். தொழிலில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் நல்ல இணக்கம் ஏற்படும். சளி மற்றும் இருமல் பிரச்சனையாக இருக்கலாம்.

சிம்மம்:
உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் மற்றவர்களின் ஆலோசனையை விட உங்கள் சொந்த முடிவிற்கு முன்னுரிமை கொடுங்கள். காலத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது அவசியம். அதிக வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் மற்றும் தலைவலி ஏற்படலாம்.

கன்னி:
உறவினர்கள் வருகையால் மன மகிழ்ச்சியடையும். வணிகம் தொடர்பான எந்த ஒரு குறிப்பிட்ட முடிவையும் எடுப்பதற்கு முன், ஒன்றிற்கு இருமுறை யோசிப்பது அவசியம். திருமண வாழ்க்கையில் நல்ல இணக்கம் ஏற்படும். அதிக வேலைச் சுமையால் சோர்வு ஏற்படும்

துலாம்:
இன்று வெற்றி கிட்டும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். முன் கோபம் நிலைமையை மோசமாக்கும். தொழில் நுட்பத்துறை சார்ந்த பணிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம்:
இன்று கிரக நிலைகள் சாதகமாக உள்ளது. கவலை மற்றும் மன அழுத்தம் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். ஒவ்வாமை தொடர்பாக பிரச்சனை ஏற்படலாம்.

தனுசு:
இன்று வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சரியான நேரத்தில் சரியானதைச் செய்யாமல் இருப்பது உங்களை காயப்படுத்தும். உங்கள் நடவடிக்கைகளில் பொறுமை அவசியம். பழைய சொத்துக்கள் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விலகி இருங்கள்.

மகரம்:

கனவுகளை நினைவாக்க இன்று சரியான நாள். வீட்டிற்கு விருந்தினர்களின் திடீர் வருகை கவலை தரும். பயணத்தை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தினருடன் வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துகொள்ளவும். வணிகம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டியிருக்கும்.

கும்பம்:
இன்று எடுக்கும் ஒரு முடிவு, எதிர்காலத்தில் மிகப்பெரிய பலனை தரும். வணிக விஷயங்களில் அதிக கவனம் தேவை. உங்கள் வியாபார நடவடிக்கைகளில் வெளியாட்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். திருமண வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் ஏற்படலாம்.

மீனம்:
இன்று திடீர் செலவுகள் வரலாம். பொறுப்பு சுமைகள் கூடி மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். வணிக விஷயங்களில் உங்கள் திறமைக்கு ஏற்ற வெற்றி கிட்டும். திருமண வாழ்வில் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதில் சில சிரமங்கள் ஏற்படும்.