வாரி தந்த வள்ளல்! வாழவைக்கும் தெய்வம்! உள்துறை அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போலீஸ்

புதுவையில் பதவி உயர்வு பெற்ற காவலர்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து பதவி மேளதாளத்துடன் நன்றி தெரிவித்தனர். 

First Published Jan 13, 2024, 11:05 PM IST | Last Updated Jan 13, 2024, 11:07 PM IST

புதுச்சேரியில் ஐ. ஆர். பி. காவல் பிரிவில் பத்தாண்டுகள், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், பணிபுரிந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து இருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயாம் IRB காவலர்கள் பிரிவை சேர்ந்த 800 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து பதவி உயர்வு பெற்ற காவலர்கள் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவிக்க மேளதாளத்துடன் பதவி உயர்வு பெற்ற காவலர்கள் அமைச்சரின் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவருக்கு ஆளுயுர மாலை அணிவித்தும், பூங்கொத்துக் கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பதவி உயர்வு அளித்ததற்காக அமைச்சரின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி அவரை தோளில் தூக்கி கொண்டாடிய போலீசார் வாரி தந்த வள்ளல்! வாழும் தெய்வம்! புரட்சி முதல்வர்! நாளைய முதல்வர். எழுச்சி நாயகன்! என்றெல்லாம் கோஷமிட்டு நன்றி தெரிவித்தனர்.

போலீசாரின் நீண்ட கால கோரிக்கையான பதவி உயர்வு பெற்ற சந்தோஷத்தில் அமைச்சரை தோளில் தூக்கி கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Video Top Stories