Viral Video : புதுவையில் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த நபர்! - அதிர்ச்சியில் மக்கள்

புதுச்சேரியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பாகுபலி போல் வானவெடி பட்டாசை தலைமேல் தூக்கி வைத்தபடி வெடித்த நபர். வைரலாகும் வீடியோ.
 

First Published Oct 25, 2022, 4:11 PM IST | Last Updated Oct 25, 2022, 4:11 PM IST

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது காலை முதலில் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெடித்து மகிழ்ந்தனர். அதேபோல் இரவு நேரங்களில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதில் புதுச்சேரி யுவர் பேக்கர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த நபர் ஒருவர் பாகுபலி போல பட்டாசை தலைக்கு மேல் கையில் பிடித்தவாறு தொடர்வெடியை வெடித்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பட்டாசு வெடித்த நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Video Top Stories