Watch : கோவில் திருவிழாவில் பெண்கள் மீது இடித்த கும்பலால் தகராறு! பயங்கர ஆயுதங்களுடன் 13 பேர் கைது!

கிருமாம்பாக்கம் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருதரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்து விராசணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

First Published Mar 15, 2023, 1:46 PM IST | Last Updated Mar 15, 2023, 1:46 PM IST

புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் அருகேயுள்ள மணப்பட்டு ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் மணிரத்தினம். இவர் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் மதிகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு கடந்த 10-ந் தேதி சென்றார். அங்கே அவரது மனைவியை சாமி கும்பிடும் போது சிலர் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மணிரத்தினம் அப்பகுதியை சேர்ந்தவர் வாலிபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் இருதரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடனே அங்கு இருந்த பொதுமக்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் மறுநாள் மணிரத்தினம் மதிகிருஷ்ணாபுரம் பகுதிக்கு சென்று, எங்களை ஏன் தள்ளிவிட்டாய் என்று கேட்டு அப்பகுதியை சேர்ந்த வீரப்பனிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் இருதரப்புக்கு இடையே மீண்டும் பிரச்சினை அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று மணப்பட்டு காட்டுப்பகுதியில் மணிரத்தினம் தரப்பினருக்கும், வீரப்பன் தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் வீச்சரிவால் மற்றும் கிரிக்கெட் மட்டை, ஸ்டம்ப் ஆகியவற்றால் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலில் பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன், மற்றும் போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

இந்த பயங்கர மோதல் குறித்து மணிரத்தினம் கொடுத்த புகாரின்பேரில் மதிகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் , வீரமுத்து, தர்மலிங்கம் , வீரப்பன் , ஜெய்சங்கர் , அன்பு தண்டபாணி, அன்பு குணசேகர் ஆகியோர் மீதும், மற்றொரு தரப்பை சே்ாந்த வீரமுத்து அளித்த புகாரின்பேரில் மணிரத்தினம், டேவிட் , முத்துக்கிருஷ்ணன் , ராஜேஷ் , சதீஷ், வைத்தீஸ்வரன், பிரகாஷ் உள்பட மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள், கிரிக்கெட் மட்டைகள் பறிமுதல் செய்யப்படடன. தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 

Video Top Stories