WATCH | பெண்ணின் கையிலிருந்து பிரேஸ்லெட் பறிப்பு! ஓடும் பைக்கில் துணிகரம்!

ஓடும் பைக்கில் பெண்ணின் கையிலிருந்த பிரோஸ்லெட் பறித்த மர்ம நபர். குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்ற போது நடந்த இச்சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியானது
 

First Published Jun 29, 2023, 10:16 AM IST | Last Updated Jun 29, 2023, 10:16 AM IST

புதுச்சேரி அடுத்த முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்யன். இவரது மனைவி சத்தியவதி. தனது குழந்தையை பள்ளியில் விடுவதற்காக, பைக்கில் சத்தியவதி அழைத்து சென்றார். அப்போது அதிதி சந்திப்பு அருகே பின்புறமாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கண் இமைக்கும் நேரத்தில் சத்தியவதி கையில் இருந்த செயினை பறித்து சென்றான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சத்தியவதி, சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொட்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். குற்றவாளி குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories