VIDEO | புதுச்சேரி மீனவ பஞ்சாயத்து கூட்டத்தில் ரகளை! நாற்காலிகளை வீசித் தாக்குதல்! - 20 பேருக்கு காயம்!

புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் மீனவ பஞ்சாயத்து கூட்டத்தில் ஏற்பட்ட ரகளையில், நாற்காலிகளை வீசி தாக்கிகொண்டனர். இதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.
 

First Published Jun 23, 2023, 3:15 PM IST | Last Updated Jun 23, 2023, 3:15 PM IST

புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் மீனவ கிராம பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதவிகளை ராஜினாமா செய்ய முன்னாள் பஞ்சாயத்தார் தெரிவித்தனர். இதற்கு சமசரம் செய்ய வம்பா கீரப்பாளையம் பகுதியை சார்ந்த நடுத்தெரு, புதுத்தெரு பொதுமக்கள் மற்றும் அங்காளம்மன் கோவில் பஞ்சாயத்தார்கள் புதிய பஞ்சாயத்தர்களுக்கு சார்பாக பேச்சுவார்த்தை முத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.

சீல் வைக்கப்பட்ட கடையில் மதுபானங்களை திருடிய ஊழியர்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

அப்பொழுது தங்கள் கோவிலுக்கு நீங்கள் வந்து பஞ்சாயத்து பேச வேண்டாம் என்று முத்து மாரியம்மன் கோவில் பழைய பஞ்சாயத்தார்கள் கூறியதால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர். இதில் சேர் மற்றும் கையில் கிடைத்த ஆயுதங்களை கொண்டு இரு தரப்பினர் தாக்கி கொண்டனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது சம்பந்தமாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு இரு தரப்பினுடைய பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர் இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories