Watch : ராஷ்ட்ரிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் அமைப்பின் புதுவை மாநில தலைவராக கராத்தே முருகன் பதவியேற்பு!

ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் என்ற அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர் கராத்தே முருகன் வில்லியனூர் திருக்காமேசுவரர் ஆலயத்தில் கோ பூஜை செய்து பதவியேற்றுக்கொண்டார். இதில், சபாநாயகர் செல்வம், அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன் கலந்துகொண்டனர்.
 

First Published Oct 26, 2022, 4:35 PM IST | Last Updated Oct 26, 2022, 4:35 PM IST

ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் என்ற அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர் பதவியேற்பு விழா வில்லியனூர் திருக்காமீசுவரர் சிவன் கோவில் தென் கோபுர வீதியில் நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் கோ பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோ பூஜை முடிந்த பின்பு மாநில தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநில தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள கராத்தே முருகனுக்கு சபாநாயகர் செல்வம் மற்றும் ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன் ஆகியோர் சால்வை அணிவித்து பதவி பிரமாணம் செய்து வைத்துனர்.

Video Top Stories