Watch : சர்வதேச திருநங்கைகள் தினம் - புதுச்சேரியில் திருநங்கைகள் கேக்வெட்டி கொண்டாட்டம்!

சர்வதேச திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ளது போன்று திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

First Published Apr 15, 2023, 1:31 PM IST | Last Updated Apr 15, 2023, 1:31 PM IST

சர்வதேச திருநங்கைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரி அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரே, ஏராளமான திருநங்கைகள் கூடி, கேக்வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் ஷீத்தல் நாயக்,

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் உள்ளதாகவும், அதேபோல் எங்களுக்கான அங்கீகாரத்திற்காகவும், குறைகளை தீர்ப்பதற்காகவும் புதுச்சேரியில் திருநங்கைகளுக்கு தனி நலவாரியத்தை அரசு உடனடியாக அமைத்து எங்களின் வாழவாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். திருநங்கைகளுக்காக இலவச மனை பட்டா வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Video Top Stories