செந்நிறமாக மாறிய கடல்; இயற்கை பேரிடரின் அறிகுறியா? புதுவையில் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கடல் அலைகளை செல்பி எடுத்தும் வீடியோ எடுத்தும் வருகின்றனர்.

First Published Oct 18, 2023, 12:34 PM IST | Last Updated Oct 18, 2023, 12:34 PM IST

புதுச்சேரி கடல்பகுதி கடந்த இரண்டு தினங்களாக அலை சீற்றத்துடனும், கடல் கொந்தளிப்புடனும் காணப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடல் பகுதி காலை முதலே சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது. இந்த செய்தி புதுச்சேரி முழுவதும் வேகமாக பரவவே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்.

அவர்கள் கடலில் சிவப்பாக உள்ள பகுதிகளை வீடியோவாக பதிவு செய்தும், கடல் முன்பு நின்று செல்பி எடுத்தும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் கடலில் இறங்கி நிற்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் பொது மக்களை கண்காணிக்க போலீசாரும் கடற்கரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் திடீரென்று கடல் பகுதி சிவப்பு நிறமாக மாறி காட்சியளிக்கும் சம்பவம் புதுச்சேரி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த நிற மாற்றம் இயற்கை பேரிடருக்கான அறிகுறியாக இருக்கலாமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் உள்ளது.

Video Top Stories