Asianet News TamilAsianet News Tamil

Watch : புதுவையில் நோய் எதிப்பு குறித்த ஆட்டோ விழிப்புணர்வுப் பேரணி!

புதுச்சேரியில் அனைத்து கிராமங்களிலும் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 12 விழிப்புணர்வு ஆட்டோக்களை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 

புதுச்சேரியில் மழை காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை சுகாதாரத்துறை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா குறித்த விழிப்புணர்வு ஆட்டோ வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

சுகாதாரத்துறை அலுவலகம் எதிரே 12 விழிப்புணர்வு ஆட்டோ வாகனங்களை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஆட்டோக்கள் புதுச்சேரியில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நல வழி மையங்கள் மற்றும் நகர சுகாதார மையங்கள் உள்ள கிராமங்களில் பொதுமக்களிடையே ஆட்டோவில் சென்று ஒலி பெருக்கு மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

மேலும் உள்ளூர் தொலைக்காட்சி மூலமாகவும் விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். நிகழ்வில் துணை இயக்குநர் ரகுநாதன், பொது சுகாதார துணை இயக்குநர் முரளி, குடும்ப நலம் துணை இயக்குநர் அனந்தலஷ்மி, யானைகால் நோய் தடுப்பு மற்றும் மலேரியா தடுப்பு பிரிவு உதவி இயக்குநர் வசந்தகுமாரி மற்றும் திட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Video Top Stories