அதிமுக கொடியை பயன்படுத்த பன்னீர்செல்வத்திற்கு தடை; புதுவையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிர்வாகிகள்
அதிமுக கொடி, கட்சி பெயர், வேட்டி, லெட்டர் பேடு பயன்படுத்த அனுமதிக்கக் கோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை வரவேற்று புதுச்சேரியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அதிமுக கொடி, கட்சி பெயர், வேட்டி, லெட்டர் பேடு ஆகியவற்றை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்த கூடாது என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் அணிக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கொடி, கட்சி பெயர், வேட்டி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.
ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை வரவேற்று புதுச்சேரியில் அதிமுகவினர், மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.