சதுரங்க வேட்டை பாணியில் பெண்களை ஏமாற்றிய திருடன்.. வெளியான சிசிடிவி காட்சி!

பெண்கள் இருக்கும் கடையில் நூதன முறையில் வாலிபர் ஒருவர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Jan 14, 2023, 6:16 PM IST | Last Updated Jan 14, 2023, 6:16 PM IST

புதுச்சேரி, லெனின் வீதியில் முருகானந்தம் என்பவர், மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வருகிறார். காலை நேரத்தில் பெண் ஊழியர்கள் கடையில் இருப்பது வழக்கம். இதை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் கடைக்கு வந்தார் . அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், உங்கள் முதலாளி அனுப்பியதாகவும், மேஜையின் இருக்கும் பணத்தை வாங்கி வருமாறு கூறினார் என்று கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய ஊழியர்கள், பணத்தை எடுத்து கொடுத்த பிறகு, அந்த வாலிபர் அங்கிருந்து மறைந்து விட்டார். பின்பு முருங்கானந்தம் கடைக்கு வந்த பிறகு தான், ஏமாற்றமடைந்து இருப்பது பெண் ஊழியருக்கு தெரிய வந்தது. இதே போல் 2 கேன் ரீபைண்டு ஆயிலை அந்த வாலிபர் எடுத்து சென்று உள்ளார்.

இது குறித்து உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.  அப்போது கடையில் கைவரிசை காட்டி இருப்பது சிதம்பரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

இதையும் படிங்க..சேது சமுத்திர திட்டத்தால் எந்த பயனும் இல்லை.. யாருக்கு பயன் தெரியுமா? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை

Video Top Stories