Asianet News TamilAsianet News Tamil

Watch : புதுவையில் ராக்கெட் பட்டாசு வெடித்ததில் கோச்சிங் சென்டரில் தீவிபத்து!

புதுச்சேரியில் சிறுவர்கள் வெடித்த ராக்கெட் பட்டாசு அருகில் இருந்த கோச்சிங் சென்டர் மீது விழுந்ததால் தீவிபத்து ஏற்பட்டது.
 

புதுச்சேரியில் நேற்று தீபாவளி பண்டியை பொதுமக்கள் மிகுந்த கோலாகலமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிலையில் மாலை 6.30 மணியளவில் வில்லியனூர் மூர்த்தி நகர், சிவசக்தி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்கும் போது தீப்பொறி விழுந்து வைக்கோல்போர் தீப்பற்றி. எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் தீயணைப்பு, துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீயை அணைத்தனர்.

பிறகு இதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் வில்லியனூர் மேலண்டை வீதி முத்தாலம்மன் கோயில் எதிரே உள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் இற்று கொட்டகையில் இயங்கி வந்த தனியார் கோச்சிங் சென்டரில் அப்பகுதி சிறுவர்கள் ராக்கெட் பட்டாசு விடும் போது தவறுதலாக கோச்சிங்க சென்டரில் விழுந்து தீப்பற்றி கொழுந்துவிட்டு எறிந்தது. உடனே வில்லியனூர் தீயணைப்பு வீரர்கள் மூர்த்தி நகர் பகுதியில் இருந்து நேரடியாக அப்பகுதிக்கு வந்த தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால்). தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கோச்சிங் சென்டரில் இருந்த பிளாஸ்டிக் சேர் மேசை. அலமாரி பிளாக் போர்டு உள்ளிட்டவைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது பிறகு தகவல் அறிந்து வில்லியனூர். ெதாகுதி எம்எல்ஏவும் எதிர்கட்சி தலைவருமான சிவா நேரில் வந்து பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் வில்லியனூர் பகுதியில் அடுத்தடுத்து தீவிபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

Video Top Stories